லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில தளபதி விஜய் நடிப்பில லியோ படம் அக்டோபர் மாசம் 19ந் தேதி அப்போ தியேட்டர்ல ரிலீஸ் ஆனது. இதுல அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் இவெங்கெல்லாம் அவங்க நடிப்பு திறைமைய காட்டி இருந்தாங்க. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிற இந்த படத்துக்கு அனிருத் மியூசிக் போட்டாரு.
இந்த படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே உலகம் முழுசா 148 கோடி ரூபாய் வசூல் செஞ்சது. அப்புறமா, ஏழு நாளுலேயே 461 கோடிக்கு மேல வசூல அள்ளிருச்சினு படக்குழு அறிவிச்சாங்க. இந்த நிலையில படக்குழு இன்னொரு அறிவிப்ப அறிவிச்சிருக்காங்க.
Also Read >> ஆவின் சொன்ன சூப்பர் நியூஸ்! என்னானு தெரியனுமா? இதோ விவரங்கள்…!
லியோ படம் உலக அளவுல மொத்தமா 540 கோடி ரூபாய்க்கு மேல வசூல கொட்டிருச்சினு போஸ்டரில படக்குழு ஹேப்பியா வெளியிட்டுருக்காங்க. அதுமட்டுமில்ல, ரஜினி நடிச்ச ஜெயிலர் படம் 525 கோடி வசூல் ஆனதுனு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவிச்ச நிலையில, இப்ப அந்த வசூலை லியோ படம் முறியடிச்சி சாதனை படச்சிருக்காம். இந்த சேதிய விஜய் ரசிகருங்க செலிப்ரேட் பண்றாங்களாம்.
நன்றி
Publisher: jobstamil.in