பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட கவினின் நண்பரான பிரதீப் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்பு வாழ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பின்னர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார்.
இவர் இந்த சீசனில் உண்மையான முகத்துடன் விளையாடி வருவதால் ரசிகர்கள் பிரதீப்புக்கே தங்களது முழு ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிரதீப்பின் நண்பர் கூறிய விஷயம் தற்போது, பிரதீப்பின் மேல் இருக்கும் மதிப்பினை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. இந்நிலையில் பிரதீப்பின் நண்பர் ஆஷிக் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கவின் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற டாடா திரைப்படத்தில், முதலில் நடிப்பதற்கு பிரதீப்பிற்கு தான் வாய்ப்பு கிடைத்தது என்றும், இப்படத்தில் கவின் நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றும் தன்னைவிட விட அவனுக்கு இப்படம் சிறப்பாக இருக்கும் என்று கூறி அவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்துவிட்டார். ஏனெனில், பிரதீப்பும் டாடா படத்தின் இயக்குனரான கணேஷ் பாபுவும் கல்லூரியில் ஒன்றாக விஸ்காம் படித்தவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள். கவினும் அந்த கல்லூரியில் தான் படித்தார். ஆனால், அவர் வேறு பிரிவு படித்தார் என்று உண்மையை கூறியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பிரதீப் மேல் இருக்கும் மதிப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com