Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
வெளியில் செல்லும் போது லைசன்ஸ் தொலைந்து போனால், உங்களுக்குக் கவலை ஏதும் வேண்டாம். உடனே உங்களிடம் உள்ள ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கர்(Digilocker) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அல்லது அருகில் உள்ள கணினி மையம் சென்று டிஜிலாக்கர் இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
அதில் உங்கள் ஆதார் எண், மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டுப் பதிவு செய்யுங்கள். பின்னர், உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் என்பதை கிளிக் செய்து, ஆவணங்களைப் பதிவிறக்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்து, மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையைத் தேர்வு செய்து, ஓட்டுநர் உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் வடிவில் சில நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். ஓட்டுநர் உரிமம் மட்டுமல்லாமல், பான் கார்டு, ஆதார் கார்டு, வாகன காப்பீட்டு ஆவணங்கள், ஆர்சி என அழைக்கப்படும் வாகனப் பதிவு விவரங்கள் என பலவற்றைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
The post வெளியில் செல்லும்போது லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?… உடனடியா உங்க போன்ல இதை பண்ணுங்க! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com