முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொள்முதல் செய்ததில், 350 கோடி ரூபாய் அளவுக்கு காமராஜ், முறைகேடு செய்திருப்பதாக, தான் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என, அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “புகார் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. 49 டெண்டர்கள் தொடர்பான மொத்த ஆவணங்கள், 24,000 பக்கங்களுக்கு மேல் உள்ளதால், அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இந்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க இயலாது” எனத் தெரிவித்தார்.


நன்றி
Publisher: www.vikatan.com