அரபிக்கடலை நோக்கி இருக்கும் இக்கட்டிடத்தில் முதலில் டி.சி.எஸ்.நிறுவனம் மற்றும் சில தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. இப்போது நிதியமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாநில அரசு இக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய பிறகு அதில் இருக்கும் அனைத்து அலுவலகங்களும் காலி செய்யப்பட்டுவிடும். கட்டிடம் இருக்கும் நிலம் ஏர் இந்தியாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஏர் இந்தியா நிறுவனம் அதனை விற்பனை செய்வதால் நிலத்தின் மார்க்கெட் விலையில் 8-ல் ஒரு பங்கு பணத்தையும் சில அபராதத்தையும் அரசுக்கு செலுத்தவேண்டும். ஆனால் அக்கட்டணத்தையும் மாநில அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
2018-ம் ஆண்டிலிருந்து இந்த கட்டிடத்தை வாங்க மாநில அரசு ஏர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கட்டிடத்தின் மதிப்பு 2000 கோடி என்று தெரிவித்தது. ஆனால் மாநில அரசு அதனை 1,450 கோடிக்குத்தான் மதிப்பீடு செய்தது. அதோடு ஏர் இந்தியா நிறுவனம் 300 கோடி வரை அக்கட்டிடத்திற்காக மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும் என்றும் அதனை கழித்துக்கொண்டு 1200 கோடி வரை கொடுக்க தயாராக இருப்பதாக மாநில அரசு தெரிவித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் மேற்கொண்டு முன்னேற்றம் ஏற்படவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com