Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில், நடிகை விஜயசாந்தி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவருமான விஜயசாந்தி, கடந்த 1998ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பாஜக மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, 2020ஆம் ஆண்டு பாஜகவில் மீண்டும் இணைந்தார். இந்நிலையில், தெலங்கானாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களை காங்கிரஸ் கட்சி தான் காப்பாற்ற வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் விஜயசாந்தி பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் பாஜகவில் இருந்து விலகும் விஜயசாந்தி காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பாஜகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி..!! காங்கிரஸில் இணையும் பிரபல நடிகை..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com