வாழ்க்கை நிரந்தரம் இல்லை, தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை….! வசமாக சிக்கிய கணவர், காவல்துறையினரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை….!

வாழ்க்கை நிரந்தரம் இல்லை, தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை….! வசமாக சிக்கிய கணவர், காவல்துறையினரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை….!

பிரபல மலையாள திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகையான அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளத்திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது அவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்ற விவரம் காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக, தெரியவந்துள்ளது. மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில், நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா நாயர். சந்தனமாலா, ஆத்ம சஹி தேவபர்ஷம் உள்ளிட்ட நெடுந்தொடர்களில், நடிகை அபர்ணா நடித்திருக்கிறார். மேகதீர்த்தம், கல்கி, அச்சயன், மடுகவ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

நடிகை அபர்ணாவுக்கு சஜித் என்ற நபருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான், திருவனந்தபுரத்தின் கரமனா என்ற பகுதியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில், சென்ற வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் நடிகை அபர்ணா நாயர் திடீரென்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான், அவர் வெகுநேரம் ஆன பிறகும் வெளியே வராததால், அவருடைய தாயார் பலமுறை கதவை தட்டி பார்த்திருக்கிறார். ஆனாலும், கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அபர்ணா தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த தாயாரும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அபர்ணாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மனைவியை இழந்து, அவருடைய கணவர் சஜித் கண்ணீர் விட்டு கதறி அழுத்துள்ளார். நடிகை அபர்ணாவின் தற்கொலை குறித்து, திருவனந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், அபர்ணாவின் கணவர், சஜித்தின் குடிப்பழக்கம் மற்றும் குடும்ப பிரச்சனையின் காரணமாக, நடிகை அபர்ணா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, சஜித், நடிகை அபர்ணாவின் தங்கை ஐஸ்வர்யாவுடன், முறைதவறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், விரக்தி அடைந்த அவர், கணவன் மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த தங்கை உள்ளிட்ட இருவர் மீதும், காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரின் பேரில், நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், சஜித்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அவர் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பிறகு, கணவர் செய்த தவறை மன்னித்து, அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டு, ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனாலும், கணவருடைய குடி பழக்கம் அபர்ணாவதற்கு மற்றொரு தலைவலியாக மாறியது. அவ்வப்பொது குடித்துவிட்டு வந்து, சஜித் அபர்ணாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அபர்ணாவின் திரைத்துறை வாழ்க்கைக்கும் அவர் தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. திரைப்படம் மற்றும் தொடர்களில் நடிக்க கூடாது என்று கணவர் அபர்ணாவிற்கு தடை விதித்துள்ளார். அதன் காரணமாக, அவர் தன்னுடைய திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதன் பின்னர், ஒரு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். இதற்கு நடுவே, கடந்த சில தினங்களாக, கணவன், மனைவிக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கணவரின் நடவடிக்கையின் காரணமாக, நடிகை அபர்ணா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதோடு. வாழ்க்கை நிரந்தரமில்லை உள்ளிட்ட உருக்கமான ஸ்டேட்டஸ்களை வாட்ஸப் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். பிரச்சனையை பேசி முடிக்க திட்டமிட்டு அபர்ணாவின் தாயார் காத்திருந்த சமயத்தில், நடிகை அபர்ணா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து, திருவனந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அபர்ணாவின் கணவர் சஜித்தை, கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றன. கணவரின் தொடர் குடிப்பழக்கம் காரணமாக, நடிகை அபர்ணா கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *