புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு!
டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு விளங்குகிறது. அதேசமயம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் முக்கிய ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில், மாலத்தீவு ஒரு புவிசார் அரசியல் ஹாட்ஸ்பாடாக மாறியிருக்கிறது. இந்தியாவும், சீனாவும் நீண்ட கால புவிசார் அரசியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவின் வளர்ச்சியில் தாராளமாக முதலீடுகள் செய்திருக்கின்றன.
மாலத்தீவில் இந்திய ராணுவம்!
மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், இந்தியாவால் வழங்கப்படும் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக, இந்திய போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல ஏதுவாக இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்களின் இந்த சிறிய குழு பல ஆண்டுகளாக மாலத்தீவில் நிலைகொண்டிருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு, பல மருத்துவ அவசர காலங்களில் இந்திய ஹெலிகாப்டர்கள் உதவியதையும் குறிப்பிட்டுள்ளார்.
முகமது மூயிஸு பேசியது என்ன?
“எங்களின் பாதுகாப்பு என்று வரும்போது, அதற்கு ஒரு எல்லைக் கோட்டை நான் வரைவேன். அதேசமயம், மற்ற நாடுகளின் எல்லைக் கோடுகளையும் மாலத்தீவு மதிக்கும். மேலும், இந்திய ராணுவத்துக்குப் பதிலாக சீனப் படைகளைக் கொண்டு பிராந்திய சமநிலையை உயர்த்த விரும்பவில்லை” என்று ஊடகத்திடம் முகமது மூயிஸு தெளிவுபடுத்தியிருக்கிறார். முகமது மூயிஸு சீனாவிடம் நெருக்கம் காட்டுபவராக அறியப்பட்டாலும், இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே, இந்த விவகாரம் எதை நோக்கிச் செல்லும் என்பது தெரியும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com