சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்தவர் 28 வயதான ரமேஷ். லாரி பட்டறை உரிமையாளரான இவருக்கு, 26 வயதான சத்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வேலை காரணமாக பட்டறையிலேயே தங்கும் இவர், வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வீட்டிற்கு செல்வார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கொங்கணாபுரம் அருகே உள்ள கருங்கல்காடு பகுதியில், ரமேஷ் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ரமேஷ் உடன் பணியாற்றி வந்த ஊழியர் சசிகுமார் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், கொலை செய்ததற்கு சசிகுமார் கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகுமாரின் தாய்க்கும், ரமேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் உறவு குறித்து சசிகுமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சசிகுமார் பலமுறை கூறியுள்ளார். ஆனால், இருவரும் சசிகுமாரின் பேச்சை கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று ரமேஷ் மற்றும் சசிகுமருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சசிகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நன்றி
Publisher: 1newsnation.com