இந்த நிகழ்வில் தி.மு.க மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அ.தி.மு.கவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது மேயர் சரவணன் கொடியேற்றி வைத்த பிறகு அவர் பேசத் துவங்கியதும், அனைத்து உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். ஆனால், குடியரசு தின விழாவை உறுப்பினர்கள் புறக்கணித்து மேயருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
ஆனால், அதே வேளையில் மண்டல அலுவலகங்களில் நடந்த குடியரசு தின விழா நிகழ்வுகளில் தி.மு.க கவுன்சிலர்கள் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது. கட்சித் தலைமை முயற்சித்த பிறகும் மேயர் மற்றும் உறுப்பினர்கள் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. வரும் 30-ம் தேதி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிலும் மேயர் – மாமன்ற உறுப்பினர்களிடையேயான மோதல் எதிரொலிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com