மாறாக மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு கொடி பிடிக்கின்ற வலதுசாரி மதவாத அமைப்புகளாக பா.ஜ.க.வின் ஏஜென்டாக ஆளுநர் நடந்துகொள்கிறார். ஆகவே சுதந்திரப் போராட்டத்தை பற்றி பேசவும் சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி பேசவும் பா.ஜ.க.வுக்கும், ஆளுநருக்கும் தான் தகுதி இல்லை.
மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழக அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு சம்பவம் குறித்து அவதூறுகளை பேசி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் ஆட்சி சிறப்பாக இல்லாததற்கு காரணம் அங்கு உள்ள ஆளுநர்கள் தான். தமிழகம் கேரளா, மேற்குவங்கம் உள்பட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் பா.ஜ.க-வின் ஏஜென்டுகளாக செயல்படுவதே ஆட்சி சிறப்பாக நடைபெறாததற்கு காரணம். இந்தியா எனும் பெயர் பாரத் என பெயர் மாற்றுவது அவசியம் இல்லாத வேலை. ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளது. அந்த விஷயத்தில் இருந்து மடைமாற்றம் செய்வதற்கான முயற்சியாக தான் இதை பார்க்கிறேன்.
தேர்தல் கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் பேசுவதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக வருவார். அதேசமயம் ம.தி.மு.க.வின் கூட்டணி விவகாரம், தேர்தலில் நான் போட்டியிடுவது, தேர்தல் சீட் விவகாரம் என அனைத்து விஷயங்களும் கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com