இதைத் தாண்டி பாலியல் பிரச்னைகள், தனிமைப்படுத்தப்படுதல், சரியாகப் பொருந்தாத மற்றும் போதிய உபகரணங்கள் வழங்கப்படாதது, குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு இல்லாமை, குறிப்பாக கர்ப்பம் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்னைகளை இப்போது வெளியிடப்பட்ட அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
`அதோடு தகுதி குறைந்த ஆண்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கு தாங்கள் அனுப்பப்படுகிறோம், மரியாதையைப் பெற நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கிறது’ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
“‘பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பெரும்பாலான வேலைகளைச் செய்ய சமமாகத் திறன் கொண்டவர்கள் என்கிற எண்ணம் கேலிக்குரியது” என்று ஓர் ஆண் கருத்தாளர் கூறினார். ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு குழுவில் பணியாற்ற வேண்டியிருந்தால் அதற்கு முன்பே விலகிவிடுவோம் என்றும், அத்தகைய சூழலில் பணியாற்றுவது அவர்களின் மனைவிகளிடையே பிரச்னைகளையும் பொறாமையையும் உருவாக்கும் என்றும் மற்றவர்கள் கூறினார்கள்.
பெண்கள் ராணுவத்தின் முன் வரிசை போர் வேலைகளுக்கு நகர்ந்தபோது, சில நேரங்களில் மோசமான கமென்ட்டுகளை வழங்குகிறார்கள். மேலும் தலைவர் பதவியை எட்டுவதில் சவாலான நிலையில் இருக்கிறார்கள்” என இந்தப் பிரச்னை குறித்து பேசிய ஒருவர் (commenter) கூறியுள்ளார்.
சிப்பாய்களில் 837 பெண்கள், 3,238 ஆண்கள் 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ சிறப்பு நடவடிக்கைப் படைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com