2018-ம் ஆண்டு முதல் தினை பயிரிட்டு வரும் மொஹந்தா, தன்னுடைய மருமகன் தனக்கு 250 கிராம் தினை விதைகளை கொடுத்தபோது பயிரை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். இது குறித்து அவர், “நான் வெள்ளரி, பூசணி மற்றும் பிற காய்கறிகளைப் பயிரிட்டேன். ஆனால், எனக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை. அதனால் தினை சாகுபடியை மேற்கொண்டேன். தற்போது என்னுடைய பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறது. தினை உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாநில அரசுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.
இவர் தன்னுடைய பங்களிப்புகளுக்காக மாநில மற்றும் தேசிய அளவில் விருது பெற்றிருக்கிறார். ஒடிசா மில்லட் மிஷன் பற்றி G20 உச்சிமாநாட்டில் பகிர்ந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. மார்ச் மாதம் 2023-ல் நடந்த தினை பற்றிய உலகளாவிய மாநாட்டிலும் பங்கேற்றார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருடன் உரையாடினார்.
ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், குந்த்ரா தொகுதி, நுவாகுடா கிராமத்தில் வசிப்பவர் ரைமதி கியூரியா. இவர் 124 உள்ளூர் தானிய வகைகள் அழிந்து போகாமல் பாதுகாத்து புகழ் பெற்றவர். இதில் 72 நாட்டு நெல் ரகங்களும், ஆறு வகையான தினைகளும் அடங்கும். தினை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் தனது பழங்குடி சமூகத்துக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட உதவினார். இது குறித்து அவர், “ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தினை விவசாயம் மற்றும் அதன் பலன்கள் பற்றி அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com