ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அது பற்றி விவாதம் நடத்தவில்லை. அது பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 143 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில்தான், மக்களவைத் தலைவரை மிமிக்ரி செய்த விவகாரத்தைக் கையிலெடுத்து உண்மையான பிரச்னையை ஆளும் தரப்பு மடைமாற்ற முயல்கிறது என்ற விமர்சனத்தை அரசியல் நோக்கர்கள் எழுப்புகிறார்கள்.
ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் இருந்து 150 எம்.பிக்களை தூக்கி வெளியே வீசி இருக்கிறார்கள். அது குறித்து எந்த விவாதமும் இல்லை. அதானி விவகாரம் குறித்தோ, ரஃபேல் விவகாரம் குறித்தோ, வேலைவாய்ப்பின்மை குறித்தோ எந்த விவாதமும் நடப்பதில்லை. எங்கள் எம்.பிக்கள் மனம் உடைந்து வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மிமிக்ரி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார் காட்டமாக.
இதற்கு முன்பு துணை குடியரசுத் தலைவராக இருந்தவர் ஹமீது அன்சாரி. அவரது பதவிக்காலம் முடிந்து 2017-ம் ஆண்டு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஹமீது அன்சாரியை கிண்டல் செய்யும் விதமாக பிரதமர் மோடி மிமிக்ரி செய்தார் என்ற வீடியோவை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ். இது தொடர்பாக, பா.ஜ.க தலைவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com