தெருவில் போகும்போது, நாய் குரைக்கிறது என்பதால் அதற்குப் பின்னாடியே நீங்களும் ஓடுவீர்களா… அதேபோல, ஒருத்தரைப் பற்றி திரும்பத் திரும்பப் பேசினால், அவன் ஃபேமஸ் ஆகிடுவான். அவன் யாரென்று தெரியாமல் இருந்தான். அவனைப் பற்றி தெரிய வைக்காதீர்கள். பேச்சாளர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். வீணாக எதையும் பேசாதீர்கள். நம் சாதனையைச் சொன்னாலே போதும். 90 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும்.


மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நம்முடைய ஆட்சிதான். மகளிர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களின் ஓட்டு நமக்குத்தான். ஆண்கள் அனைவரும் காலையில் ஒரு மாதிரி, மதியம் ஒரு மாதிரி, மாலையில் ஒரு மாதிரி இருப்பார்கள். அதேபோல, ‘நாம் செய்வது யாருக்கும் தெரியாது’ என்று நினைக்கக் கூடாது. எல்லாம் ஓப்பன் சீக்ரெட்தான். அதனால், யாரோ மைக் பிடித்து பேசிவிட்டால், அவர் யாரென்று மக்களுக்குத் தெரியாதா… மக்கள் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால், எழுந்துச் செல்லும்போதுதான், ‘வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறான். இவன் செய்வதெல்லாம் இப்படி’ என்று பேசுவார்கள்’’ என்றபோதுதான், அந்த வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார் எனத் தெரிகிறது.
“தனி நபர் யாரையும் குறிப்பிட்டுத் திட்டுவதற்காகவும் அப்படி பேசவில்லை. அமைச்சர் குறித்து யாரும் தவறாக வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’’ என ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com