நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “தே.மு.தி.க இனி என்னவாகும், விஜயகாந்த் மீதான அனுதாப அலை தேர்தல்வரை நீடிக்குமா என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. தே.மு.தி.க-வின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை பொறுத்தே அது அமையும்.
வரும் நாட்களில் தே.மு.தி.க-வின் அரசியல் நிகழ்வுகளுக்கு கூடும் கூட்டம், பிரமலதா விஜயகாந்த்துக்கு இருக்கும் வரவேற்பு உள்ளிட்டவற்றை கவனித்த பா.ஜ.க-வும் தி.மு.க-வும் காய் நகர்த்தும். மோடியின் நகர்வுகளை இரண்டு விதமாக பார்க்கலாம். கூட்டணி கணக்கு இருக்கும் என்றாலும், விஜயகாந்த் மீது கரிசனம், அன்பு கொண்டவர்களின் வாக்குகளை கவரும் திட்டமும் இதில் இருக்கலாம்” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர்கள் சிலர், “பிரதமர் மோடியின் இரங்கல் செய்திகள் மனிதாபிமான அடிப்படையிலானது. இதில் எந்த அரசியலும் கிடையாது. தே.மு.தி.க-வை கூட்டணியில் சேர்ப்போமா இல்லையா என்பது தனி. இதற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமில்லை” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com