‘மலிவான தேர்தல் விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை ஏன் செலவழிக்கிறீர்கள்?’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிதியை மோடி அரசு வழங்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை. ஆனால், மலிவான தேர்தல் விளம்பரத்துக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை பா.ஜ.க அரச செலவிடுகிறது’ என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருக்கிறார்.
ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களை வைத்து விளம்பரம் தேடுவதில் அதீத ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், ரயில்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில் ஏன் அக்கறை காட்டவில்லை என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ரயில்வே துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் இல்லை. மேலும், ரயில்வேயில் பல சேவைகள் தனியார்மயம் ஆக்கப்பட்டதால், ரயில் பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட தேவைகள் தரமாகக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது. இவற்றில் கவனம் செலுத்தாத மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு விளம்பரம் தேடுவதற்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்கலாமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com