இதனால், அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு, பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அரசு நடத்தும் டாஸ்மாக் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த டாஸ்மாக்குக்கு மது வாங்க வருவோர் மதுவை வாங்கி அங்கேயே அதனை அருந்தி, அத்ந் பகுதியை ஒரு திறந்தவெளி பார் ஆகவே மாற்றிவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், மதுபாட்டில்களை அங்கேயே வீசுவது, அங்கேயே சிறுநீர் கழிப்பது என மதுப் பிரியர்கள் செய்யும் முகம் சுளிக்கவைக்கும் செயல்களால், அங்கு பேருந்து பேருந்து ஏற வரும் பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், முதியவர்கள் அவதியுறுகின்றனர்.
இதே பகுதியில், போக்குவரத்து காவலர்களும் நாள்தோறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும்கூட, அந்தப் பகுதி இவ்வாறு திறந்தவெளி பார் போல செயல்படுவது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், உடனடியாக அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு இதேபோல்தான், திருவல்லிக்கேணியில் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் டாஸ்மாக் அமைந்திருந்தது. அதுபற்றி புகார் வந்தபோது அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், அதேபோன்ற டாஸ்மாக்குகள் இன்னும் பல பகுதிகளில் இயங்கிவருவது, அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தேதான் நடக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை பொதுமக்களிடம் எழுப்புகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com