இதையடுத்து ம.பி.யில் இந்த முறையாவது வெல்லும் எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்துமா காங்கிரஸ் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் முன்வைத்தோம். “மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்தது போல, இந்த முறை பா.ஜ.க செய்வதற்கு வாய்ப்பு குறைவு தான். இதேபோல்தான் முந்தைய தேர்தலின் போது கர்நாடகாவிலும் நடந்தது. எனவே அம்மாநிலத்தில் 2023-ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க மீண்டும் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் வேலையை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் வேட்பாளர் தேர்வின் போது காங்கிரஸ் மிகவும் கவனமாக இருந்தது.
இதை வைத்து பார்க்கும் பொழுது மத்திய பிரதேசத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் பட்சத்தில், அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களை, பா.ஜ.க.வால் இழுக்க முடியாது. கடந்த 2018-ம் ஆண்டு ம.பி.யில் ஆட்சியை கைப்பற்றிய போது, பா.ஜ.க மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, “அனைத்து இடங்களிலும், இதே வேலையைதான் பா.ஜ.க செய்கிறது’ என சாடியிருந்தார். இதுபோல் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்வினையாற்றினார்கள். எனவே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில், அதுபோன்ற இமேஜ் தனக்கு மீண்டும் வருவதை பா.ஜ.க விரும்பாது. மேலும் கடந்த ஆண்டில் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தின் மூலமாக பா.ஜ.க.வுக்கு இடம் தரக்கூடாது என்பதில் காங்கிரஸும் மிக கவனமாக இருக்கும்” என்றார், கவிதா முரளிதரன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com