வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அதிகம் பெற்றால் அல்லல் மயம்
அளவோடு பெற்றால் வளமோடு வாழலாம். “
‘ நாம் இருவர் நமக்கு இருவர் ‘
‘ நாம் இருவர் நமக்கு ஒருவர்
‘ஒன்று பெற்றால் ஒளிமயம்.’
இப்படியாக வாசகங்களை நான்கு சக்கர வாகனங்கள் துவங்கி, ஆட்டோ அனைத்து அரசு அலுவலக சுவர்கள் என குடும்ப கட்டுப் பாட்டு விளம்பரத்துக்காக எழுதிய காலம். இதோ இப்போது ‘ நாமே குழந்தை நமேக்கேன் குழந்தை. ‘ என வாசகம் எழுதும் காலம். இதோ கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியில் கூட திருமணமே செய்யாமல் தனியாக சுதந்திரமாக வாழ விரும்புகிறேன் என வெளிப்படையாக பேசும் அளவிலான மாற்றம் தமிழ்நாட்டில்.
அது என்னுடைய கல்லூரிக் காலம் சென்னை சைதை அண்ணா சாலையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் தங்கி படித்து வந்தேன். அது ஒரு வார இறுதி விடுமுறை நாள். ஒருவர் விடுதிக்கு ஒரு சினிமாவில் குரூப் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்க வேண்டும் வர முடியுமா மாலையில் அதற்கான சம்பளமாக பணம் வழங்கப்படும் என கூறினார், உற்சாகமாக நானும் சக விடுதி மாணவர்களும் கிளம்பினோம். நாங்கள் சென்றடைந்த இடம் சென்னை காசிமேடு. கடலோரமாக ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்க படப்பிடிப்புக்காக சூழல் உபகரணங்கள் என அந்த இடமே பரபரப்பாக இருந்தது. சற்றே பெரிய பல வண்ண குடையின் கீழாக ஒரு சாய்வு நாற்காலியில் படத்தின் இயக்குநரான மணிரத்னம் அமர்ந்திருந்தார். மாதவன், சூர்யா, சித்தார்த்த் நடித்த ‘ஆயுத எழுத்து ‘ படத்தின் படப்பிடிப்பே அது. இப்போது நடிகராக உள்ள நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தி அப்போது இயக்குனர் மணிரத்னம் அவர்களுடைய உதவி இயக்குநராக பணியாற்றிய காலம்.
நன்றி
Publisher: www.vikatan.com