8-ம் வகுப்பு படிக்கும்போது தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்காக நடக்க ஆரம்பித்த சீதாக்காவின் கால்கள் இன்று அவரின் 52 வயதில் அமைச்சராக மக்களுக்காக இன்னும் வேகமாக முன்பைவிட வேகமாகப் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்குச் சிவப்புக் கம்பளத்தில் அடியெடுத்திருக்கும் இவரின் பாதங்கள் கடந்தது வந்த பாதைகள் அனைத்தும் முட்கள் நிறைந்த கரடுமுரடானவை.
நக்சலைட், வழக்கறிஞர், எம்.எல்.ஏ, முனைவர், அமைச்சர் என தன்னுடைய அனைத்து பரிமாணங்களிலும் தன்னுடைய மக்களின் நலனை இலக்காக வைத்துச் சாதித்துக் காட்டியிருக்கும் சீதாக்காவின் வாழ்க்கை, வாழும் தலைமுறைக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் வரலாறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தன் வாழ்வின் வழிநெடுக படிப்பையும், கொள்கையையும் நேர்கோட்டில் வைத்து மக்களுக்காகக் களமாடும் அமைச்சர் சீதாக்காவுக்கு வாழ்த்துகள்…!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com