அதேசமயம், மாநில நீர்வளத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், `நீரில் 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிமுகங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா, “தரைப்பகுதியிலிருந்த எண்ணெய்க் கழிவுகள்தான் நீரில் கலந்தது என்றால், இப்படி நடக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா… எண்ணூர் முகத்துவாரப் பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு என மீன்பிடி ஆதாரங்கள் மிகுந்த பகுதிகளில் எண்ணெய்க் கழிவுகள் இருப்பது அச்சுறுத்தலாக இருக்கிறது. 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் கலந்த பிறகுதான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இது தெரிந்தது என்றால் நிறுவனங்களிடம் என்ன பேரிடர் தடுப்பு திட்டம் இருக்கிறது… மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் எண்ணெய்த் தடயம் என்று கோருகிறது, நீர்வளத்துறை எண்ணெய்க் கழிவு என்று கூறுகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. உண்மை நிலையை அறிய தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை… மாவட்ட ஆட்சியரும் வருவாய்த்துறை நிர்வாகமும் என்ன செய்கின்றன?” எனக் கட்டமாகக் கேள்வியெழுப்பினார். மேலும் இது தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com