
தமிழக தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகள் கடும் சேதமடைந்தது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி, நிவாரணப்பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் போன்றவை நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தமிழக அரசும், தனியார் தொண்டு நிறுவனமும் நிவாரண பொருட்களை வழங்கியது. மேலும், கடந்த 21 ஆம் தேதி வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ALSO READ : பொதுமக்களுக்கு புதிய எச்சரிக்கை! தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கிய ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ்..!
வெள்ளம் ஏற்பட்டும் அதிக பாதிப்புகள் ஏற்படாத பகுதியான கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதனையடுத்து, கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in