கள்ளக்குறிச்சியில் பழுதான சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படுமா?: குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

Malfunctioning CCTV cameras in Kallakurichi to be repaired?: A continuing problem in detecting crime   கள்ளக்குறிச்சியில் பழுதான சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படுமா?: குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

கள்ளக்குறிச்சி- கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பழுதடைந்து பயனற்றுப்போனகண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க காவல் துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகரப்பகுதி போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. மாவட்ட தலைநகரமாக விளங்கும் இங்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இதனால் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் என நகருக்கு வந்து செல்வோரின் கூட்டம் அதிகளவில் உள்ளது.

இதனால் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் காவல்துறை சார்பில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குற்ற தடுப்பு பணிகளில் பெரும் உதவியாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

கள்ளக்குறிச்சி நகரின் நான்கு முக்கிய சாலைகள், நான்குமுனை சந்திப்பு, பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, நகரின் நுழைவு வாயில்கள், முக்கிய சாலைகள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் 95 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சூரிய ஒளி மற்றும் மின்சாரம் மூலம் இயங்க கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையாக கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கேமராக்களின் பெரும்பாலானவை பழுதடைந்து செயல்படாமல் போய் உள்ளன.

இதனால் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள மானிடரிங் ஸ்கிரீனில் ஒன்றிரண்டு தவிர மற்ற அனைத்தும் சிக்னல் இன்றி வெறுமையாக இருக்கின்றது.

குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாரின் மூன்றாவது கண்ணாக விளங்கிவரும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டன.

ஆனால் இவற்றை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குற்ற தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

எனவே, கள்ளக்குறிச்சியில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சீரமைக்க காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.dinamalar.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *