மரக்காணம்- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் துறை வாகனங்களில் 360 டிகிரி கண்காணிப்பு கேமரா பொருத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில் அனைத்து காவல்துறை வாகனங்களின் மேல் பகுதியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 360 டிகிரி கோணத்தில் (நான்கு பக்கங்களிலும்) இயங்கும் அதிநவீன ஹெச்.டி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் கூட படம் எடுக்க எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் வசதி. மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கும் வசதி, 500 மீட்டர் துாரத்தில் உள்ள வாகன எண்ணைக் கூட துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லும் போது கூட தெளிவாக வீடியே எடுக்கும் திறனுடன் கேமராவுக்கு பாதுகாப்பு கவசமும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் பெருமளவு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக அப்பகுதி போலீசார் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருதரப்பினர்களிடையே மோதல் ஏற்படுவது, கோவில் பிரச்னை, சாலை மறியல், அரசியல் வாதிகளின் போராட்டம், ஆர்ப்பாட்டம், மீனவர்கள் மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஏதாவது ஒரு பிரச்னை நடந்த வண்ணம் உள்ளது.
அப்போது சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று சிரமப்பட்டு மொபைல் போன் மூலம் படம் பிடிக்கின்றனர். அப்போது அந்த பதிவுகளில் சிக்காமல் சிலர் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் அந்த களேபரங்களில் மொபைல் போன் மூலம் முழுமையாக படம் எடுக்க முடியாமல் போகிறது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை வாகனங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது போன்று, 360 டிகிரி கோணத்தில் வீடியே மற்றும் புகைப்படம் எடுக்கும் அதிநவீன கேமராவைப் பொருத்தினால், துாரத்தில் இருந்தே குற்ற சம்பவங்கள் நடக்கும் இடத்தின் அனைத்து தகவல்களையும் துல்லியமாக சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க பயன் உள்ளதாக இருக்கும்.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரக்காணம்- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் துறை வாகனங்களில் 360 டிகிரி கண்காணிப்பு கேமரா பொருத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement