தேவிப்பட்டினம், : -மகாளய அமாவாசயை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தேவிபட்டினம் நவபாஷண கோயில், சேதுக்கரையில் பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி மகாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது.திருப்புல்லாணி அருகே சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயில் அருகே மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி முதல் ஆயிரக்கணகான பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவிந்தனர்.முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்ருக்கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். சேதுக்கரை கடற்கரை வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அருகே உள்ள ஆஞ்சனேயர் கோயிலில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளைப்பிள்ளையார், அகத்தியர் கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து பூஜைகளை செய்தனர்.பசுக்களுக்கு வெல்லம், பச்சரிசி, அகத்திக்கீரை, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வழங்கினர். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு கடலில் நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மனுக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. குளிர்பானம், அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
* தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக புனித நீராடிய பக்தர்கள் கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.
தேவிப்பட்டினம், : -மகாளய அமாவாசயை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தேவிபட்டினம் நவபாஷண கோயில், சேதுக்கரையில் பக்தர்கள் குவிந்தனர்.புரட்டாசி மகாளய அமாவாசை சிறப்பு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement