சங்கராபுரம்: மாநில அளவிலான கயிறு தாண்டும் போட்டியில் சங்கராபுரம் மாணவ, மாணவியர் அதிக பதங்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
ஆந்திரா மாநிலம், தெனாலியில் 19வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தேசிய அளவில் கயிறு தாண்டும் போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து 32 மாணவ, மாணவியர் விளையாடியதில், 26 தங்கம், 15 வெள்ளி, 1 வெண்கலம் என 42 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பில் 3ம் இடம் பிடித்தனர்.
இதில் பயிற்சியாளர் சூரியமுர்த்தி தலைமையில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ, மாணவியர் 11 பேர் பங்கேற்றதில், 6 தங்கம், 5 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
சங்கராபுரம்: மாநில அளவிலான கயிறு தாண்டும் போட்டியில் சங்கராபுரம் மாணவ, மாணவியர் அதிக பதங்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.ஆந்திரா மாநிலம், தெனாலியில் 19வது ஜூனியர் மற்றும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement