இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். இதற்கு முன்பு அவருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியிடம் பேசினோம். அவர்கள் அப்போதே நிதிஷ் குமார் கூட்டணியிலிருந்து வெளியேறவே விரும்புகிறார் எனக் கூறினார்கள். அவர் எங்களுடன் இருக்க விரும்பினால் இருந்திருப்பார். அவர் செல்ல விரும்புகிறார். அதனால்தான் அவர் வெளியேறிவிட்டார். இது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் இந்தியா கூட்டணியைத் தக்கவைக்க இது தொடர்பாக வெளியே நாங்கள் பேசவில்லை.
எதையாவது நாங்கள் சொல்லி அது தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல் இன்று உண்மையாகிவிட்டது. `ராம்-கயா ராம் ஆயா” ” எனத் தெரிவித்திருக்கிறார். 243 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில், ஆர்.ஜே.டி-க்கு 79 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-வுக்கு 78, ஜே. டி. யு- 45, காங்கிரஸ் 19, CPI (M-L) 12, CPI(M),CPI தலா 2, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4, AIMIM 2, ஒரு சுயேச்சை ஒருவர் என்ற அடிப்படையில், உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com