இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே தவிர மக்கள் நலனில் துளியும் அக்கறை காட்டவில்லை. அதனால் வார்டு மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவரை மாற்றினால் மட்டுமே மக்களிடம் கட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும்.
அதன் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். கட்சித் தலைமை சார்பாக பேசியவர்கள், எங்களின் கோரிக்கையை ஓரிரு மாதங்களில் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். 55 கவுன்சிலர்களில் 38 பேர் மேயருக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளோம். மேயர் சரவணன் நியாயமானவராக இருந்தால் அப்போதே தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? இருந்தாலும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்” என்றார்கள்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான கூட்டம் நடக்க வேண்டுமானால் 80 சதவிகிதம் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருக்க வேண்டும். அதன்படி 44 கவுன்சிலர்கள் பங்கேற்றால் மட்டுமே கூட்டம் நடைபெறும். ஆனால் கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று பெரும்பான்மையான தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. அதனால் தற்போதைக்கு நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
நன்றி
Publisher: www.vikatan.com