பின்னர், போலீஸில் தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்த பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “2011-ல் புகார் கொடுக்கப்பட்டதே தி.மு.க, காங்கிரஸ் தூண்டுதலால்தான். இப்போதும் இந்த புகாரின் பின்னணியிலும் தி.மு.க-வின் தூண்டுதல் இருந்திருக்கிறது. என் மீதான மதிப்பைக் கெடுத்துவிடலாம் என்ற இது செய்யப்பட்டது. முன்பு, 60 லட்சம் பணம் கொடுத்ததாகவோ, நகை கொடுத்தத்தவோ ஏன் புகாரில் சொல்லவில்லை. இதெல்லாம் வெறும் அவதூறு. இந்தப் பெண்களால் நான் தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன்.
இந்த சமூகத்தின் முன்பு நான் அசிங்கப்படுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை அவர்களே சான்றுகளோடு நீதிமன்றத்தில் சொல்லவேண்டும். எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொன்னேன் என்பதெல்லாம் நகைச்சுவை. என்னுடைய மௌனத்தில் அதிகமாகப் பேசிவிட்டார்கள். அவர்கள் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் 20-ம் தேதி வருகிறது” என்று கூறினார். மேலும், சீமானின் மனைவி கயல்வழி, இந்தப் பிரச்னையால் தனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com