தொப்பை என்பது சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதை எப்படி குறைப்பது என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு முறையில், இந்த தொப்பையை குறைத்தால் தான், பக்க விளைவு என்பது ஏற்படாமல் இருக்கும். அதோடு, உணவு கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலமாக, தொப்பையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜங்க் உணவுகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முற்றிலும் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தால், தொப்பையை குறைப்பதற்கான எளிமையான வழி கிடைத்துவிடும்.
பாதாம், பிரேசில் நட்ஸ், அக்ரூட் பருப்பு மற்றும் பிஸ்தா உள்ளிட்ட நான்கு வகையிலான நட்ஸ் உணவுகளை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், தொப்பையும் குறைந்து விடும்.
அத்துடன் மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியம் மேம்படும், அதோடு, பசி உணர்வை கட்டுக்குள் வைக்கும் உணவாக இவைகள் இருக்கின்றன. மேலே சொல்லப்பட்ட நான்கு உணவுகளில், இருக்கும் புரதம் வெகு நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் என்பதும், அடிக்கடி உணவு சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: 1newsnation.com