முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றுவரும் ஒடிசாவில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் சுந்தர்கர் மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ராஜ்கங்பூர் பகுதியிலுள்ள சமூக சுகாதார மையத்தில் (Community Health Centre), காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சி.எஸ்.ராசன் ஏக்கா என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, மருந்து எழுதிக்கொடுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
ஒடிசா சட்டமன்றத்துக்குள் எம்.எல்.ஏ-வாக நுழையும் முன்பு மருத்துவராக இருந்த ராசன் ஏக்கா, எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார். இப்படியிருக்க, ராஜ்கங்பூர் பகுதி சமூக சுகாதார மையத்தில் மருத்துவர்கள் பற்றாக் குறை தொடர்பாக மக்கள் அளித்த புகாரின் பேரில், நேற்று அங்கு வந்த ராசன் ஏக்கா, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com