இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்ய விரும்புவோருக்கு இந்த அறிய வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாட்டிலேயே வேலை வாய்ப்பு என்றால்… ஆம்! நம்ம தமிழகத்தில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் தான் வேலை அறிவிப்பு வந்துள்ளது. பேங்க் வேலைக்காக வெயிட் பண்ணும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கி வேலையில் சேர முயலுங்கள்.
வேலையை பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-
ஐஓபி என்று அழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஈரோடு மாவட்டத்தில் செயல்படுகிறது. இவ்வங்கியில் வேலை செய்யத்தான் பணியாட்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆபீஸ் அசிஸ்டெண்ட் பணிக்காக ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் அனைவருமே IOB Erode வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
மாதந்தோறும் 12,000 ரூபாய் சம்பளமாக பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Also Read – காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் வாக்-இன் இன்டர்வியூ – மாதந்தோறும் 45 ஆயிரம் சம்பளம்
வயது வரம்பாக 22 முதல் 40 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க விரும்பினால் IOB Erode Recruitment 2024 Official Notification லிங்கில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள். இந்த வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க IOB Erode Recruitment 2024 Application Form டவுன்லோட் செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பியுங்கள்.
Indian Overseas Bank, Regional Office, 12/1 APT Road, Park Road-Sathy Road Jn, Erode-638003 என்ற அஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in