கோமாளி, லவ் டுடே படத்தை இயக்கியவரு தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்துல ஹீரோவா நடிச்சி நம்ம எல்லார் மனசுலயும் இடம் பிடிசிட்டாருனு தான் சொல்லணும். ஏன்னா, அந்த அளவுக்கு செம்ம ஹிட் ஆகிடுச்சி. அந்த படத்தில வரும் சொல்லுங்க மாமா குட்டி அப்டிங்குற டைலாக் செம்ம டிரெண்டா மாறிடுச்சி. இப்ப இன்னொரு படத்துலயும் ஹீரோவா நடிச்சிட்டு இருக்காரு.
இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில கலந்துகிட்ட பிரதீப் ரங்கநாதன் பேசினார்…
லவ் டுடே படத்துல மாமா குட்டினு சொல்லிருப்பேன். உண்மையாவே இங்க நம்மள சுத்தி நெறைய மாமா குட்டிங்க இருக்குறாங்க. எக்ஸ் பாய்பிரண்ட், எக்ஸ் கேர்ள் பிரண்ட் இல்லாதவங்களே யாருமே இப்போ கிடையாது. சொல்லப்போனா கிட்டத்தட்ட எல்லாருமே மாமா குட்டிங்க தான்.
Also Read >> பங்காரு அடிகளார் மறைந்தது எங்களுக்கு பேரிழப்பு… ஆர்.எஸ்.எஸ். தலைவர் இரங்கல்…!
நான் பேசுறது, என் நடவடிக்கை எல்லாம் நடிகர் தனுஷ் மாதிரி இருக்குனு சொல்லுறாங்க. ஆனா அது உண்மையானு எனக்கு தெரியல. என்ன பொறுத்தவரை நான் எதையும் வேணும்னு செய்யல. நான் தனுஷ் மாதிரி இருக்கேனு ஒப்பிட்டு பேசுறது தப்புனு நினைக்க தோணுது. அவர் எங்கயோ இருக்குறாரு. ஆனா நான் இப்ப தான் ஆரம்பிச்சிருக்கேன். இப்படி நிகழ்ச்சியில பிரதீப் ரங்கநாதன் சொன்னார்.
நன்றி
Publisher: jobstamil.in