ஒடிசாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய சகோதரிக்கு 14 வயதாக இருக்கும்போது, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதாவது 2018 மே மாதம் முதல் 2019 மே மாதம் வரை, குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில், தன்னுடைய சகோதரியை மிரட்டிப் பல முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த சிறுமி, 14 வயதிலேயே கர்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசியத்தை யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி பயத்தில் உறைந்துபோயிருக்கிறார்.
இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அங்கு வெளிவந்த தீர்ப்பில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, குற்றவாளி ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.கே.சாஹூ விசாரித்து வந்தார். இதையடுத்து, இந்த வழக்கு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று விசாரணைக்கு வந்தது.
இது குறித்து நீதிபதி தனது தீர்ப்பில், “சகோதரிக்கு சகோதரன் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாகவும், கடைசி மூச்சு வரை உன்னை வளர்ப்பேன் என்றும் உறுதிகொள்ளும் நாளன்று இதுபோன்ற முரண்பாடான வழக்கை கேட்பதும், அதற்கு தீர்ப்பு வழங்குவதும் அதிர்ச்சியாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. இந்த பெண்ணின் சாட்சியில் எந்தவித குறைபாடும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்திற்கு மேலும் நம்பகத்தன்மையை வழங்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அவர் அபராதத் தொகையைக் கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்” என வேதனையை தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com