காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண்கள் மீதான அவமதிப்பும், அவமரியாதை உணர்வும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர், அதிகார ஆணவத்தில், வெட்கமின்றி பெண்களுக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.
பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் ஒரு தொழிற்சாலை வேண்டும் என்று கேட்கும் பெண்ணிடம், அடுத்த முறை சந்திரயான் நிலவுக்குச் செல்லும் போது, அதில் உங்களை அனுப்புகிறேன் என பகிரங்கமாகக் கிண்டல் செய்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து ஆம் ஆத்மி, “ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சேவை செய்யப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இன்று பொதுமக்களைக் கேலி செய்கிறார்கள். இது அந்த மாநில முதலமைச்சருக்கு அவமானம்”‘ எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com