இது தொடர்பாக வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம். “இறந்தவர்களை தண்டிக்க முடியாது என்பது எளிமையான லாஜிக். அதே நேரம் பொருளாதார மோசடி வழக்குகளைப் பொறுத்தவரை இறந்தவர்களிடம் சொத்து இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்தாலும், அவரது வாரிசிடம் அதை வசூலிக்க முடியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கைப் பொறுத்தவரைக்கூட அவர் இறந்த பிறகும், அபராதம் கட்டத்தான் செய்தார்கள்.
முஷரஃப் வழக்கைப் பொறுத்தவரை அண்மையில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு, முட்டாள்தனமானதுதான். இறந்த ஒருவருக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும். ஒருவர் இறந்துவிட்டால், அவர் நிரபராதி ஆகிவிட்டார் என்பது நம் நாட்டு சட்டம் அல்ல. வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இறந்தவர்களை சேர்க்காதது குறித்தும் சிலர் விமர்சிக்கிறார்கள். எதற்கு அவர்களை சேர்க்க வேண்டும்… சேர்த்தால் தண்டனை கொடுக்க வேண்டும், முடியுமா… எனவே, ஒரு காமன் சென்ஸ்படி நவீனச் சட்டம் அப்படிச் சேர்ப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை எனக் கருதுகிறது.
அதற்காக அவர்கள் நிரபராதிகள் என்று அர்த்தமில்லை. என்னைப் பொறுத்தவரை இறந்தவருக்கு தண்டனை வழங்குவது அறிவுபூர்வமானது அல்ல. இதன் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளது. ஒருவர்மீதான பிம்பத்தை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகச் செய்வதுதான் இது” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com