கனிமொழி அழைப்பின் பேரில் அக்டோபர் 14ஆம் தேதி சோனியா காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக மகளிரணி சார்பில் அக்டோபர் 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தருவதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி தமிழ்நாடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: 1newsnation.com