Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் தாங்கள் செல்கிறார்கள். நம் ஊரில் முன்னோர்கள் கூறியதை இன்றளவும் நாம் அதனை பின்பற்றி வருகிறோம். ஆனால், ஜப்பானின் மியாகி மாகாணத்தில் உள்ள தஷிரோஜிமா தீவு பூனை தீவு என்று அறியப்படுகிறது. இந்த தீவு பூனைகளின் சொர்க்கம் என்றே சொல்லலாம். அங்கு மனிதர்களை விட பூனைகள் அதிகமாக இருக்குமாம். நீங்கள் ஒரு பூனை நபராக இருந்தால், இந்த இடம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒன்று.
தஷிரோஜிமா மட்டுமே பூனைகள் அதிகம் வாழும் ஒரே பூனைத் தீவு என்று சொல்லிவிட முடியாது, நாட்டில் இது போன்று பல இடங்கள் உள்ளன. ஆனால் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த தீவில் மக்கள் தொகை மிகவும் குறைவு தான் என்றாலும் இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தீவிற்கு ஆயிரக்கணக்கான பூனைகள் குவிந்தது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தஷிரோஜிமா தீவின் குடியிருப்பாளர்கள் அங்கு இருக்கும் பூனைகளின் மீது மிகவும் பாசமானவர்களாக இருப்பார்களாம். பூனையை இவர்கள் அதிர்ஷ்டமாக பார்க்கின்றனர். எடோ காலத்தில் (1600 – 1868) இந்தத் தீவு பட்டு உற்பத்தியில் மும்முரமாக இருந்தது. பட்டு உற்பத்தி செய்யும் இடத்தில் கண்டிப்பாக பட்டுப்புழுக்கள் இருக்கும். அப்போ பட்டுப்புழுக்களை உண்ண அங்கு எலிகள் இருக்கும் தானே? இந்த எலிகளை எல்லாம் விரட்ட தான் பூனைகளை இங்கு கொண்டு வந்திருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீன்பிடித்தல் தீவுவாசிகளின் முதன்மைத் தொழிலாக மாறியது. பூனைகளும் இதன் மூலம் பயனடைந்தன.
இந்த தீவில் மியோரி ஆலயம் என்று ஒன்று உள்ளது. தற்செயலாக பாறைகள் விழுந்து இறந்த பூனையின் நினைவாக இது கட்டப்பட்டது. நீங்கள் ஒரு பூனை பிரியராக இருந்தால் இந்த இடத்தை நிச்சயம் நீங்கள் சென்று பார்க்கலாம். ஆனால் தீவில் ஆடம்பரமான ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் எதுவும் இருக்காது. உள்ளூர் பொருளாதாரத்திற்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இருந்தாலும், பூனைகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும் பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இடையே பல சவால்களை முன்வைக்கின்றனர். எனவே அந்த தீவிற்கு வருபவர்கள் பூனைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் குப்பைகளை சேர்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர்வாசிகள் அங்கு இருக்கும் பூனைகளுக்கு போதுமான உணவை அளித்து வருகின்றனர்.
The post சகுனம் பார்க்கும் பூனைகளுக்கு கோவில் கட்டி வழிபடும் மக்கள்!… இப்படியொரு தனித்தீவா? appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com