Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆன போதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்ளிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நடிகை கெளதமி புகார் அளித்துள்ள நபருக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில், கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? கெளதமி கட்சியில் தொடர்வது அவரது தனிப்பட்ட உரிமை. கட்சியில் இருந்து விலகினால் அவருக்கு தேவையான உதவியை கட்சி செய்யும். கெளதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும். தனிப்பட்ட முறையில் நானும் அவருக்கு துணை நிற்பேன்” என்றார்.
The post ’தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு துணையாக நிற்பேன்’..!! கௌதமிக்கு ஆதரவாக குதித்த அண்ணாமலை..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com