ஆனால், இப்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் கொல்லப்பட்டால், அந்த ஓட்டுநருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும்.
ஒருவேளை அவர் சம்பவ இடத்தை விட்டுத் தப்பிவிட்டாலோ, காவல்துறையினருக்குச் சம்பவம் குறித்து புகாரளிக்கத் தவறினாலோ 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 7 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்கள், லாரி ஓட்டுநர்கள் இரண்டு நாள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தின் காரணமாக சாலைகள் ஸ்தம்பித்தன. ஹைதராபாத்தில் ஜனவரி 2 அன்று பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் பெட்ரோலுக்காக காத்திருந்தனர். சில இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
`விதிகளை அமல்படுத்துவதற்கு முன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் செவ்வாய்கிழமை இரவு முடிவுக்கு வந்தது.
இந்தச் சம்பவத்தையொட்டி நீண்ட வரிசையில் பெட்ரோலுக்காக காத்திருக்காமல் ஸொமேட்டோ ஊழியர் டெலிவரி செய்ய குதிரையில் சென்றதால் வீடியோ வைரலாகி உள்ளது.
அரசு கொண்டுவந்த `ஹிட் அண்ட் ரன்’ சட்ட திருத்தம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்டில் சொல்லுங்கள்!
நன்றி
Publisher: www.vikatan.com