இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்ற `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டம், 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 2024-ம் ஆண்டிற்கு மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் PMAY-U-ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90,000 வீடுகள், சோலாப்பூரில் உள்ள ராய் நகர் ஹவுசிங் சொசைட்டியின் 15,000 வீடுகளை, பிரதமர் மோடி இன்று பயனாளர்களுக்கு வழங்கினார்.
நன்றி
Publisher: www.vikatan.com