கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கின. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவிலிருந்து விமானத்தில் மாலை 4:50 மணிக்கு சென்னைக்கு வந்தார்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை 9:20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சிக்குச் செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், இரவு 7:30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்குச் சென்று, அங்கு இரவு தங்குகிறார்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். அதன் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்குச் செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து அயோத்தி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 22,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com