ஃபேன்டஸி கேமிங்குக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாக கடந்த காலங்களில் இந்த நிறுவனம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது. ஃபேன்டஸி விளையாட்டுகள் நம் நாட்டில் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வரும் பணம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வருகின்றன. எனவே அவற்றின் சட்டபூர்வ தன்மை குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. இது போன்ற மூன்று நான்கு வழக்குகள் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, அவை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
எனவே, கற்பனை விளையாட்டுகள், திறமை விளையாட்டுகள் மற்றும் திறன் விளையாட்டுகள் நம் நாட்டில் சட்டபூர்வமானவை என முடிவுசெய்யப்பட்டது. எனவே, அவற்றை விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை” எனக் குறிப்பிட்டார். ஆனாலும், காவல்துறை அதிகாரி விளையாடியதும், அதன் மூலம் கிடைத்த வருமானம் குறித்தும் காவல்துறை விசாரித்துவருகிறது. விசாரணைக்குப் பிறகே, இந்த வழக்கு குறித்துத் தெரியவரும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com