பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “ஆசியாவின் மாண்புகள், நமது வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை இந்தியாவையும் ஆசியாவையும் இணைக்கின்றன.
கடந்த ஆண்டு இந்தியா-ஆசியான் நட்பு தினத்தைக் கொண்டாடி, விரிவான கூட்டாண்மைக்கு ஒரு வடிவத்தை அளித்தோம். நமது கூட்டாண்மை 40 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் நீண்டுவருகிறது. நான் இந்த உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்குகிறேன். இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை நான் வாழ்த்துகிறேன்.
நாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமை, அமைதி, செழிப்பு மற்றும் பல்முனை உலகில் பரஸ்பர நம்பிக்கை, இந்தோ-பசிபிக் மீதான ஆசியாவின் கண்ணோட்டம் ஆகியவை நம்மை ஒன்றாக இணைக்கின்றன. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முயற்சியில் ஆசியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. எனவே, ஆசியன்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான மறு ஆய்வை, குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டியது அவசியம்” எனக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com