உத்தரப்பிரதேசத்தில், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களை கவர்ந்து மதம் மாற்றும் வேளையில் ஈடுபட்டதாக இருவர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், பைபிளைக் கொடுப்பது மதமாற்றத்துக்கான வேலை என்று கூற முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி 24-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ஜோஸ் பாப்பாச்சென், ஷீஜா என்பவர்கள் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களை கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றுவதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.


அந்தப் புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தனர். அதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்துக்குச் சென்றபோது, ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், இருவரின் ஜாமீன் மனுவும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஷமிம் அகமது தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com