2023 ஆகஸ்ட் வரை 56 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அதில் 53 சதவிகிதம் பெண்களுக்கான வங்கிக் கணக்குகள். எந்த மாநிலத்தில் என்ன திட்டம் செயல்படுத்தினாலும் அது நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான தொலைநோக்கு எண்ணத்தை கொண்டவர் நம் பாரதப் பிரதமர். இன்று அனைத்து சகோதரிகளும் செல்போனை காண்பித்து, ‘என் வங்கிக் கணக்கில் ரூ.1000/- வந்துவிட்டது என்று கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நான் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு கோரிக்கை, இந்த திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது. அதனால் ஒரு ரூபாய் போடுகிறேன், ஐம்பது பைசா போடுகிறேன், 10 பைசா போட்டு கணக்கை சரி செய்கிறேன் என்றெல்லாம் கூறாமல், 27 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.27,000/- கொடுக்க வேண்டும். ஏனென்றால் அப்படித்தான் கூறினீர்கள்.
இன்று மணிக்கணக்கில் வரிசையில் நிற்காமல், எனக்கும் வங்கிக் கணக்கு இருக்கிறது என்று சாமானிய மக்கள் கூறுவதற்கு காரணம், பிரதமரின் தொலைநோக்குப் பார்வைதான். இதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். புதுச்சேரியில் கூட உதவித் தொகைகள் நேரடியாக வருவதற்குக் காரணம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதால்தான். அந்த வங்கிக் கணக்கு யாரால் வந்தது. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனேயே ’ஜன்தன்’ என்ற மக்கள் வங்கிக் கணக்கை ஆரம்பித்தவர் நம் பிரதமர்” என்றவரிடம், ‘மகளிர் உதவித் தொகை திட்டத்தை கொண்டு வந்தாலும் அது பா.ஜ.கவின் வெற்றியா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதை மக்களுக்கு கொண்டு சேர்த்தது பா.ஜ.கதான். பா.ஜ.க-வென்றால் மத்திய அரசுதான் என்று சொல்லலாம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com