ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த எண்ணிக்கை 2,000-ஆக உயர்ந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நினைத்தால், சாதிரீதியான வன்முறைகளைத் தடுக்க முடியும். வன்முறையைத் தூண்டுபவர்கள், தூண்டிவிட நினைப்பவர்களைக் கைதுசெய்ய முடியும். இந்த நிலை நீடித்தால் தீர்வு என்ன… இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், இந்த ஆட்சி நீடிக்குமா என்பது தெரியவில்லை.
தமிழகத்திலுள்ள காவல் நிலையங்களில் உளவுத்துறையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான், பணியில் இருக்கிறார்கள். அவர்கள் தவறாகவே தகவல் கொடுக்கிறார்கள். சில காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களும் ஒரே சமூகத்தினர். பிறகு எப்படி மாற்றுச் சமூகத்தினர் புகாரளிக்க முடியும். புகார் கொடுத்தாலும் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்… இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com