உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் 3,00,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 8,20,000 – 920,000 மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக, ரஷ்யக் கொள்கைக் குழுவான Re:Russia-ன் அறிக்கை தெரிவித்திருக்கிறது.


கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் பேட்ரியார்க் கிரில் ஏற்பாடு செய்த உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் பல பாரம்பர்ய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “நாட்டில் உள்ள பெண்கள் எட்டு குழந்தைகள் வரைப் பெற்று, பெரிய குடும்பங்களை உருவாக்க வேண்டும் என்பதை விதிமுறையாக வலியுறுத்த வேண்டும்.
நன்றி
Publisher: www.vikatan.com