இந்த நிலையில், தற்போது அந்த 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கும் `தூக்கு தண்டனை’ விதித்து உத்தரவிட்டிருக்கிறது கத்தார் நீதிமன்றம். அதன்படி, முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் மற்றும் முன்னாள் கமாண்டர்களான அமித் நாக்பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்கான மின்னணு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கத்தார் அரசாங்கத்தின் இந்த தீர்ப்பு, இந்திய அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “இந்த 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தண்டனைக்குள்ளான 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் செயல்பட, அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது குறித்து கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். கத்தார் அரசிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்!” என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com